நடமாடும் நதிகள் - 26

நடமாடும் நதிகள் - 26
==================
வறண்டபூமி
புதிதாய் துளிர்த்த புல்
மயானமான நதியின் சிரிப்பு...
==================
ஓடியாடிய காலங்கள்
திரும்ப ஓடிவந்தது
பால்ய சிநேகிதன் சந்திப்பு…
==================
உற்சாகமாய் பூக்கள்
ஒன்றுமட்டும் வாடிப்போய்
கோபித்துக் கொண்டதோ வண்ணத்துப்பூச்சி!
==================
அத்துவானக் காடு
இயற்கை போட்ட விளக்கு
கண் சிமிட்டும் சூரியஒளி!
==================
பேசியே கொல்கிறான் அரசியல்வாதி
பிடித்துவிட்டது அவனுக்கு வியாதி
தேர்தல்!
==================
மீன்சந்தைக்காரன் படபடப்பானான்..
பார்க்க வந்தவன் பயந்து ஓடினான்..
நாடாளுமன்றம்!
==================
கொண்டாட்டமாய் வெடிச்சத்தம்
கல்வியைத் தொலைத்து துக்கத்துடன்
சிவகாசிச் சிறுவன்!
==================
சூறாவளி
உதிராத ஒற்றைப்பூ
கூந்தலுக்கு மேலே ஒய்யாரமாய்..
==================
இல்லையொரு அகராதி
புரியாமலே ரசிக்க வைக்கும்
மழலை மொழி!
==================
நிறைந்திருந்த கேணி
படம் பிடித்த நிலா
உள்ளேயதன் செல்ஃபி!
==================
அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக...
==================
தொடர் தொகுப்பாசிரியர் தோழர் ஜின்னா
தொடர் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி T N
முகப்பட வடிவமைப்பாளர் தோழர் கமல் காளிதாஸ்
முகப்பட பெயர் பதிப்பாளர் தோழர் ஆண்டன் பெனி
==================
அ.வேளாங்கண்ணி
==================