சில்லறை

அலட்சியமாய் பேசியவரும்
ஏளனமாகச் சிரித்தவரும்
தேடித்தேடி அலைகிறார்
தட்டுப்பாட்டில் தவிக்கிறார்
சில்லறைக்காக சிலநாளாய் !
சில்லறையென கேலிசெய்வரும்
சிறுபிள்ளைத்தனம் என்பவரும்
வணங்கி வரவேற்கின்றனர்
வரிசையில் நிற்கின்றனர்
சில்லறையைப் பெறுவதற்காக !
பழனி குமார்