எனதன்பு நண்பன் காற்றிற்கு ஒரு கடிதம்

உண்மையில் நடந்ததென்ன?

பூமி எங்கும் சுற்றி திரியும் உருவமில்லாத
காற்று நண்பனே!
உன் வாய் திறக்க மாட்டாயோ???...
வெற்று வார்த்தைகளால் வதந்திகளைப் பரப்பும் ஊடகங்களின் முகத்திரை கிழிக்க மாட்டாயோ???...

பொய்மை கலந்த வாய்மையை விலக்கி உண்மைக்கு உயிர் தர மாட்டாயோ???....
பதவியால் மக்களின் நிம்மதியான வாழ்வைச் சூரையாடும் சதிகாரர்களின் கதை முடிக்க மாட்டாயோ???...

ஆடம்பரத்தின் பெருந்தூண்களை சாய்க்க மாட்டாயோ???...
ஊழல்களெனும் ஆலமரத்தை வேரோடு பிடுங்கி எறிய மாட்டாயோ???...

அரசியல் கொள்ளையர்களின் பணம் எவ்விடம், எவ்வகையில் குவிந்துள்ளதென்பதையும் சொல்ல மாட்டாயோ???...

ஓ காற்று நண்பனே!
உன் திருவாய் திறந்து,
சத்தியம் உரைப்பாயோ???....
அனைத்து உயிர்களுக்கும் சுவாசமாகி வாழவைக்கும் காற்று நண்பனே!
உண்மைக்கு சுவாசமாக தர மாட்டாயோ ???...

நீ வாய் திறந்து, உண்மையில் நடந்ததென்னவென்று
உரைக்காதவரை,
நாங்கள் யாவரும் உண்மையறியாத மூடர்களாய் தானிருப்போம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Dec-16, 11:48 am)
பார்வை : 573

மேலே