மாரியின் சீற்றம்

தாகமென்றேன்,
தண்ணீராய் வந்தாள், இயற்கைத்தாய்...

சென்று நனையலானேன், ஜலதோஷமாகி, இருமல் தருகிறாள் இயற்கைத்தாய்...

என் மேலென்ன கோபமென்றே வினாவினேன்,
குளிர்ந்த மழையாய் நடுநடுங்க வைக்கிறாள், இயற்கைத்தாய்...

கோபங்கொண்டாளோ??.
மக்களை அழிக்க விழைந்தாளோ???..

எங்கும் நோய் பரப்பி, மண்ணைக் குளிர்வித்து, ஞாலத்தில் பலரை அழிக்க பாசம் கொண்டாளோ???...

உடல் பலத்தைக் குலைப்பதன் மூலம் மனோபலம் குலைத்து,
மாரியின் வழி சீற்றத்தை வெளிக்காட்டுகிறாளோ???...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Jan-17, 5:42 pm)
பார்வை : 789

மேலே