கடமையை மட்டும் செய்
பருவம் தப்பி பெய்கிறாய்...
அவசியமில்லாத இடங்களில் பெய்கிறாய்...
மழை வேண்டி பல நிலங்கள் காத்திருக்க,
மழை வேண்டாத சாக்கடையில் கொட்டித் தீர்க்கிறாய்...
உனது நோக்கம் தானென்ன??...
எதைச் சாதிக்க இப்படிச் செய்கிறாய்???...
உனது வழியே பெய்கிறது பல நோய்மழை...
காரணமென்ன?, நீ அமிலத்தன்மை கொண்டாயோ???...
பயிர்களை வாழ்விக்க பெய்வாயாக...
உயிர்களை அழிக்க பெய்யாதே...