பொறுமை என்னையும் சோதித்தது

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுடன் என் கல்லூரி படிப்பு முடிகிறது. இன்று என் கல்லூரியில் எனக்கு நேர்முக தேர்வு(Campus Interview) இருக்கிறது. இது தான் கடைசி சுற்று. ஏற்கனவே நடந்த மூன்று சுற்றுகளில் தகுதி பெற்றேன் இன்று கடைசி சுற்று இதில் தகுதி பெற்றால் எனக்கு வேலை கிடைத்து விடும்.

நேர்முக தேர்வு 11 மணிக்கு தொடங்குகிறது ஆனால் இப்பொழுதே மணி 10 ஆகிவிட்டது இன்னும் நான் கல்லூரிக்குள் செல்லவில்லை. ஏதோ சில காரணங்களால் தாமதமாகிவிட்டது.

மிகவும் அவசர அவசரமாக கிளம்பினேன். கல்லூரி செல்வதற்கு பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன் சிறிது நேரம் கழிந்ததும் என் கல்லூரி வந்துவிட்டது. பேருந்தில் இருந்து இறங்கினேன் மணி 9.30 தான் ஆகி இருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதும் சாலையை கடந்தால் என் கல்லூரி வந்து விடும்.

கல்லூரிக்கு செல்ல சாலையை கடக்க நின்று கொண்டு இருந்தேன். என் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருந்தவர் "சார் சார்" என்று என்னை கூப்பிட்டார். அவரை திரும்பி பார்த்தேன் அவருக்கு ஐம்பது வயது இருக்கும். கையில் ஒரு குச்சியும், முகத்தில் கருப்பு கண்ணாடியும் அணிந்து இருந்தார் அதை பார்த்ததும் அவர் பார்வையற்றவர் என்று புரிந்துக்கொண்டேன். பின்பு அவரை பார்த்து "சொல்லுங்க ஐயா" என்று கூறினேன்.

"என்னை எதிரில் இருக்கும் வங்கியில் விட்டுவிடுங்கள் சார்" என்று கூறினார். நானும் அவரின் கையை பிடித்து சாலையை கடந்து வங்கியின் அருகில் விட்டுவிட்டேன். "சார் கொஞ்சம் வங்கி உள்ளே என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டார்" மணி 10.40 ஆகியிருந்தது, தேர்வுக்கு இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே உள்ளது. சரி என்று அவரை வங்கி உள்ளே விட்டேன். மறுபடியும் அவர் " சார் என் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார். அதற்க்கு நான் கொஞ்சம் கோவமா "ஐயா எனக்கு நேரம் ஆகிவிட்டது நீங்க வேறு யாரிடமாவது உதவி கேளுங்கள்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் "சார் தயவு செய்து உதவி செய்யுங்கள் சார்" என்றார். அவரை விட்டுச்செல்லவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை. அவருக்கு பணம் எடுத்துக்கொடுத்து வங்கியின் வெளியில் விட்டுவிட்டேன். மணி 11.15 தேர்வு ஆரபமாகியிருக்கும்.

அவர் என்னிடம் "சார் ரொம்ப நன்றி சார், அப்படியே என்னை பேருந்தில் மட்டும் ஏற்றி விடுங்கள் சார்" என்று கூறினார். அது வரை பொறுமையாக இருந்த நான் அதை கேட்டதும் கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டேன் அவரை கண்ட படி திட்டிவிட்டேன். என்னை விட வயதில் பெரியவர் என்று கூட பார்க்காமல் அவரை திட்டி விட்டு அங்கே இருந்து கல்லூரிக்கு கிளம்பி விட்டேன்.

மணி 11.30 நேர்முக தேர்வு முடிந்து இருக்கும் எனக்கு வேலை கிடைக்காது என்று நினைத்துக்கொண்டே கல்லூரிக்குள் சென்றேன். என் அம்மா எனக்கு வேலை கிடைத்து விடும் என்று என்னை கோவிலுக்கு எல்லாம் கூட்டிக்கொண்டு சென்றதை நினைத்துக்கொண்டே நேர்முக தேர்வு நடக்கும் அறைக்கு சென்றேன். அங்கே சென்றதும் தான் எனக்கு தெரிந்தது, ஏதோ சில காரணங்களால் தேர்வு நாளை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்று.

அதை கேட்டதும் மகிழ்ச்சியில் கல்லூரியிலிருந்து வெளியே வந்தேன். வெளியே வந்ததும் சோகத்தின் உச்சத்தை அடைந்தேன். அந்த பார்வையற்றவர் இன்னும் சாலையை கடக்காமல் நின்றுக்கொண்டு இருந்தார். தேர்வு இன்று இல்லை, நாளை தான் என்று எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவரை அப்படி திட்டியிருக்கமாட்டேனே. அந்நேரத்தில் என் பொறுமையை கடைபிடிக்க மறந்துவிட்டேனே என்று எண்ணினேன்.

நான் செய்த தவறை உணர்ந்து அவரிடம் போய் "ஐயா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறி அவரை அவரின் வீட்டுலையே விட்டு விட்டேன், நானும் வீடு திரும்பினேன்.

எழுதியவர் : சரவணன் (18-Feb-17, 8:14 am)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 485

மேலே