எந்த விதத்தில் உயர்ந்தவர்

வாழும் மாந்தருக்கு
வரமாய் அமைந்த வார்த்தை
ஆக்கம் தந்து
அறிவை ஊக்குவித்தாலும்
ஆணவம் கொண்ட
அகங்கார சொல்

விலங்குகளின் பெருந்தன்மை
வாழும் மாந்தரிடம்
இல்லாதபோதும்
விலங்கிடமிருந்து மனிதனை
வேறுபடுத்தி
பெருமை சேர்க்கும் சொல்

கூட்டுக் குடும்பமாய்
காட்டில் திரியும் விலங்குகள்
வஞ்சித்து வாழாது,
வயிற்று பசிக்காக வேண்டி
வேட்டையாடும்—கூடி
சேர்ந்துண்ணும்

உலகில் எந்த மூலையில்
வாழ்ந்தாலும் விலங்குகள்
அந்தந்த இனத்தின்
ஒரே மொழியைத்தான் பேசும்,
சான்றோரைப்போல
சாதி,மதபேதம் பார்க்காது

தன் வாழ்க்கை தரம் உயர
தனக்கென மனிதன் பெற்றதோ
அறிவு, சிந்தனை, மொழியென்றாலும்
வேற்றுமையை உருவாக்கி
ஒற்றுமையை சீர்குலைத்து
அழிவைத்தேடும் மனித இனம்

மானுடப்பண்பை இழந்து
மாந்தர் மிருகமாக மாறுவர்,
விலங்குகளோ நேர்மையாய்
வாழும் என்றும் விலங்குகளாய்,
ஆறறிவு பெற்ற மாந்தர்
எந்தவிதத்தில் உயர்ந்தவர்?

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jul-17, 3:59 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 101

மேலே