என் வாழ்க்கை

என் வாழ்க்கை

என் வாழ்க்கையில்
எல்லோருக்கும் உண்மையானவளாக எப்பொழுதும் இருப்பேன் ...
என் மனசாட்சிக்கு உண்மையானவளாக இருப்பேன் ...

யாரிடமும் வீண் சண்டைக்கு போனதில்லை ...
எனக்கு எதிரி துரோகி கிடையாது ...எல்லோரும் நண்பர்களே ...
எப்படியானது என் உலகம் என்றால்
ஒரு தோட்டம் அதில் யாவும் இயற்கை ...
இசை ...உண்மை ...நேர்மை ...வாய்மை ...பெண்மை ....ஆண்மை ...
என் குடும்பம்
என் நட்பு ...பக்கத்து உலகம் ...
சமூகம் பிரபஞ்சம் ...
சமூகத்தை மிதிப்பதில்லை ...என் பாதையில் நான் செல்கிறேன் ...
என்னை நான் விளம்பரம் செய்வதில்லை ....
என்னை எனக்கும் ...என் சூழலான என் குடும்பம் நட்புகளுக்கும் தெரிந்தால் போதும் ...
நான் யார் என்றால் நான் ஒரு பெண் ...
இதில் செயற்கை இல்லை , நஞ்சு இல்லை ....

எல்லோரையும் சிரிக்க வைத்திடுவேன் ...
யாரோ ஒருவரின் ஒற்றை துளி கண்ணீரிலும் சிரித்திட மாட்டேன் ...

என் தாய் தந்தைக்கு மகளாக
என் சகோதரி சகோதரனுக்கு என்றும் தங்கையாக
என் பாட்டிகளுக்கு பேத்தியாக ( நீங்கள் இல்லை என்றால் என்ன பாட்டி ...இந்த உயிர் காற்றோடு கரைந்து விடும் ...இந்த உடல் மக்கி விடும் ...இந்த பொருட்கள் எல்லாம் அழியும் ...அழியாதது என்றால் அது அறிவும் உணர்வும் ...நீங்கள் இல்லை என்று வருத்தம் கிடையாது ...நீங்கள் என்னை சுற்றி தான் இருக்கிறீர்கள் ...எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் ....)(சோகம் வேண்டாம் ...முடிந்த கதை முடிந்தது ...சிரியுங்கள் ... ஹா ஹா ...என் பாட்டிகளுக்கே அழுகை பிடிக்காது . எனக்கு அழ வைக்க பிடிக்காது ... இருந்தால் என்ன ? இறந்தால் என்ன ? நம்மோடு தானே இருக்கிறார்கள் ... நம்மீது அவர்கள் வைத்த பாசம் இல்லை என்றாகிவிடுமா என்ன ? ....) (சிரிப்பு , கண்ணீர் , கோபம் , சோகம் , வருத்தம் , வெற்றி , தோல்வி , மகிழ்ச்சி , இன்ப துன்பம் ....இப்படி எல்லாம் நிறைந்தது தானே வாழ்க்கை ...எல்லாவற்றையும் உண்மையாக வாழ்ந்து பாருங்களேன் வாழ்க்கை தரும் அனுபவம் அழகானது )
தாத்தாக்கள் சொல்லவில்லையா ... தாத்தாக்களுக்கு பேத்தியாக ... தாத்தாக்கள் இருவரையும் பற்றி தெரியும் ...
இருவரும் அப்பா அம்மா திருமணத்திற்கு முன்பே இறந்து விட்டார்கள் ...
தோழிகளுக்கு தோழியாக ( என் தோழிகளை பற்றி சொல்லவேண்டுமென்றால் நிறைய சொல்லணும் ...பாவம் என் கை உடைஞ்சிடும் ...நாங்க எங்க பள்ளி ஆகட்டும் கல்லூரி ஆகட்டும் பெரிய குழு எங்களோடது ...நல்ல பசங்க எல்லோருமே ....எல்லாத்தையும் சரியா செய்வோம் ...அந்த வயதுக்குரிய அழகான குறும்பு ...துரு துரு ...வாலுத்தனம் ...பிடிவாதம் ...கெஞ்சல் ...செல்ல சண்டை ....இப்படி எல்லா நட்பும் எப்படி இருக்குமோ அப்படியே எங்களோட நட்புக்களும் ....)
அவர் கரம் பிடித்து அவரோடு வாழ வேண்டும் ...அவரோடு சாக வேண்டும் ...(எல்லா நிலைகளிலும் உடன் இருப்பேன் ...)
அவரில்லாமல் நான் இல்லை ...
என் குழந்தைகளுக்கு தாயாக (என் குழந்தைகள் என்பதில் என் அக்காவின் குழந்தைகளும் உண்டு )
என் அண்ணனான தந்தையான என் தாய்மாமன் அக்காவின் கணவர் ... என் மாமனுக்கு மகளாக ...
இந்த இயற்கை பூமிக்கு உண்மையானவளாக வாழ்வேன் அவள் மடியில் உறங்குவேன் ...

யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிவிட மாட்டேன் ...
மூளையால் யோசிக்க வேண்டியதை மூளையால் யோசிப்பேன் ...
மனதால் உணர வேண்டியதை உணர்வேன் ...

என் உலகம் எங்கும் உண்மை ...இயற்கை ...

ஒருவனை துன்புறுத்தும் மனிதா ...
துன்புறுத்தும் முன் யோசி ...
உனக்கு காயம் ஏற்பட்டால் எப்படி வலிக்குமோ அப்படியே வலிக்கும் எவருக்கும் ...
உனக்கு வலித்தால் எப்படி குடும்பம் துடிக்குமோ ...
அப்படியே யார் குடும்பம் என்றாலும் துடிக்கும் ...
இதை நீ உணர ஆரம்பித்தால் உலகில் உதிரம் சிந்தாது வன்முறையினால் ...

வாழ்க்கை வாழ்வதற்கே ... உண்மையாக வாழ் ... உன்னால் முடியும் ...
மனிதம் வாழட்டும் ...பூமி செழிக்கட்டும் ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Jul-17, 1:51 pm)
Tanglish : en vaazhkkai
பார்வை : 1153

மேலே