இது தானோ வாழ்க்கை

எந்திரமாய் போகும் வேலை
மந்திரமாய் செல்லும் நாட்கள்
தந்திரமாய் பல மனிதர்கள்......!!!

பாதை எங்கும் முட்கள்
கண்ணை மறைக்கும் கடன்
கானல் நீராய் மறையும் பணம்
வெயிலாய் வாட்டிடும் துன்பங்கள்
நிழலாய் தந்திடும் இன்பங்கள்...........!!!

தோள் கொடுக்க தோழன்
ஆறுதல் சொல்ல அக்கா
தைரியம் கூறும் தந்தை
தாங்கி பிடிக்கும் தாய்
மடியில் தாங்கும் மனைவி
மார்பில் தூங்கும் குழந்தை

இதுதானோ வாழ்க்கை............!?!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (24-Jul-17, 1:43 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
பார்வை : 170

மேலே