வானவில்
வான வீதியில் நடக்கிறது
வண்ண ஊர்வலம்!!!
மேகமகள் மழைத் துளிக்கொண்டு
பன்னீர் தெளிக்கிறாள் - உற்சாகமாய்.....
கதிரவனை வரவேற்க!!!
அவனது ஒளிக் கீற்றுகள்
பட்ட நொடியில்
விரிந்தது வானவில்!!
ஏழ் வண்ணங்களைக் கொண்டு
வானவீதியின் அலங்கார வளைவுகள் என!!!
நினைத்த நேரத்தில் காண முடியா
அதிசயமாய்- அசத்தும் ஆச்சர்யமாய்!!!
கண நேரத்தில் கண்களில் பட்டு மறையும்
ஒளி ஓவியமாய் !!!
உள்ளம் கொள்ளை கொள்ளும்
இயற்கையின் அதிசயம் - வானவில்!!!