எண்ணப் பிரதிகள்

மனிதனின்
மன எண்ணங்களை
பிரதியெடுக்கும் அளவிற்கு
தொழில்நுட்பம்
வளர்ந்துவிட்டதா என்ன ??
ஒரு தனி மனிதனது
எண்ணங்களில்
உதித்த கவிதைகள்
அச்சில் வார்த்தது போல்
சிறு மாற்றம் கூட இல்லாது
வெவ்வேறு கவிஞர்களின்
பெயர்களில்
இணையத்தில் விரவிக்
கிடக்கின்றனவே !!!

ஒருவரது எண்ணமதில்
உதிக்கும் கவிதை
ஒரு பெண்ணின்
கருப்பையில் உதிக்கும்
கருவைப் போன்றது.....
கருவைத் திருடும்
கயவர்களே......
உங்களுக்கு என்ன
தண்டனை
கொடுத்தால் தகும்??

எழுதியவர் : பி.தமிழ் முகில் (14-Dec-11, 5:22 am)
பார்வை : 290

மேலே