விதி


எதனால் என்னவாவோம்
என்பது மதி
எப்போது என்ன வருமென்பது விதி

தன்வினை தன்னைச் சுடுமென்பது மதி
எவன் வினையோ உன்னைச் சுடுவது விதி

ஊரோடு ஒத்து வாழ்தல் இயற்கையான மதி
ஊரே இயற்கையால் அழிவது விதி

பணக்காரன் ஆரோக்கியம் தேடுவது மதி
பரதேசி பூரண ஆரோக்கியனாயிருப்பது விதி

பிள்ளைப் பேரு வேண்டி விஞ்ஞானத்தை நாடுவது மதி
வேண்டாதோர்க்கு மந்தையெனப் பிறப்பது விதி

ஊரோடு வீடோடு வாழ்தல் மதி
நாடற்ற வீடற்ற நாடோடிக்கு விதி தருவதோ நிம்மதி!!

எழுதியவர் : தேவா விஜயவேல் (3-Jan-10, 12:00 pm)
சேர்த்தது : Devaraj N
பார்வை : 796

மேலே