என் நண்பேன்டா....!!!!!

உன்னை நான்,
கட்டியும் அணைக்கலாம்,
எட்டியும் மிதிக்கலாம்...!!

உன்னிடம் நான்,
அன்பும் காட்டலாம்,
அடியும் வாங்கலாம்..!!!

உனக்கு நான்,
சாய்ந்து கொள்ள தோளும் கொடுக்கலாம்,
தொல்லையும் கொடுக்கலாம்..!!

உன்னோடு நான்,
விளையாடவும் செய்யலாம்,
விலகி போகவும் துடிக்கலாம்..!!!

உனக்காக நான்,
பெருமையும் படலாம்,
அவமானமும் அடையலாம்..!!

உன்னை நான்,
நண்பனாகவும் ஆக்கலாம்,
விரோதியாகவும் மாற்றலாம்..!!

உன்னுடன் சேர்ந்து,
சிரிக்கவும் செய்யலாம்,
அழவும் செய்யலாம்..!!!

உன் காதலை நான்,
சேர்த்தும் வைக்கலாம்,
செருப்பிலும் அடிக்கலாம்..!!!

உனக்கு நான்,
உயிரையும் கொடுக்கலாம்,
உயிரையும் எடுக்கலாம்..!!!

இப்படியாக,
உன்மேல் உள்ள என் காதலிடம்
என் காதலியும் தோற்று விடுவாள்..!!!

ஏனெனில் நீ என்,
நண்பேன்டா....!!!!!

எழுதியவர் : மனோ ரெட் (29-Dec-12, 4:19 pm)
பார்வை : 654

மேலே