எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து பொங்கல் போட்டி 2016 ------------------------------------------------- ஓவியம்-02 கண்டனே...

எழுத்து பொங்கல் போட்டி 2016

-------------------------------------------------
ஓவியம்-02
கண்டனே கண்டனே பட்டாடை பெண்னொன்றை   
மண்ணிலே மண்ணிலே மான் கூட்டம் பட்டாளமே 

அந்தியில் மனம் போக 
பந்தியில் நான் பார்க்க
சந்தியில் மலர் ஒன்று 
தந்தியாய் என்னுள்ளே 

கண்டனே கண்டனே பட்டாடை பெண்னொன்றை 
மண்ணிலே மண்ணிலே மான் கூட்டம் பட்டாளமே
 
காலையில் அஸ்தமனம் 
மாலையில் சந்ரோதயம் 
கலையான கூந்தலில் 
மழைக் காற்று பூச் சூட 

கண்டனே கண்டனே பட்டாடை பெண்னொன்றை   
மண்ணிலே மண்ணிலே மான் கூட்டம் பட்டாளமே

நெற்கதிரை அவள் பார்க்க 
வெட்கத்தால் நான் ஒளிய
இனிக்கின்ற கரும்புகள் 
கடிக்கும் எறும்பானதே  

கண்டனே கண்டனே பட்டாடை பெண்னொன்றை      
மண்ணிலே மண்ணிலே மான் கூட்டம் பட்டாளமே 

பூங்காற்று தீண்டிடவே 
கங்கையும் சலங்கையிட 
தோள் தந்த தோழியிடம் 
எனைச் சொன்னானே!

தை மாத திருநாளில் 
தை மகளாய் வந்தாயே
தை மாத கனவுகளில் 
என் வருங்காலம் தந்தாயே

கண்டனே கண்டனே புத்தாடை பெண்னொன்றை
மண்ணிலே மண்ணிலே மான் கூட்டம் பட்டாளமே 

நாள் : 16-Jan-16, 9:28 am

மேலே