கேட்க மறுக்கும் அரசின் காதுகளுக்கு தமிழ்நாட்டில் 1983 ல்...
கேட்க மறுக்கும் அரசின் காதுகளுக்கு
தமிழ்நாட்டில் 1983 ல் எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட மதுக் கடைகள், 1989 களில் கருணாநிதி அரசு அமுல்படுத்தியமலிவு விலை பாக்கெட் சாராய விற்பனையும், அதன் நீட்சியாக உருவாக்கப்பட்ட தனியார் மற்றும்அரசு மதுக் கடைகளினால் ஏற்பட்ட தாக்கமும் மது அடிமை நோயாளிகளின் எண்ணிக்கையைத் தமிழகத்தில்கோடிகளில் அதிகரிக்கச்செய்தது. இந்த மதுக் கடைகளினால் சமுகத்தில் நேரடியாக மற்றும்மறைமுகமாக பல்வேறு பிரச்சனைகள் விசுவரூபம்எடுத்தது. பின்பு இது ஜெயலலிதா ஆட்சியில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்பட்டன. அதன் பிறகுமது வருமானமே அரசின் பிரதான நோக்கமாக மாறியது. இதனால் தமிழக அரசுக்கு மதுவினால் மட்டும்ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி வரையில் ஆண்டு வருமணமாக வந்தன. இதனை மக்கள் முழுவதும்எதிர்க்காமல் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் அனைத்தும்மதுவினால் கிடைத்த பணம் என உணரவைக்கப்பட்டு மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்படுவதுதான்கொடுமையின் உச்சம். மதுக் கடைகளை திறப்பதற்கும் விற்பனைக்கும் இலக்குநிர்ணயிக்கிறார்கள். ஆனால் கல்விச்சாலைகளை திறக்க இலக்கு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அன்மையில் நடந்த நிகழ்வில் வேதனையாகக் கூறியுள்ளார். இது தற்போதுள்ள அரசின்நயவஞ்சக தனத்தையும், தமிழகத்தின் அவல நிலையைக் காட்டுகிறது. இவை மட்டுமன்றிதமிழகத்தில் அரசுப் பள்ளிகளை விட அரசு மதுக்கடையே அதிகம் உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெரும்பான்மையான பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் போன்ற போது இடங்களில் தான் மதுக்கடைகள் அதிகம் திறக்கப்பட்டுள்ளன. உதாரணமாக பால்லாவரம் மரைமலை அடிகளார் அரசு மேனிலைப்பள்ளியின் சுற்றுசுற்றில்தான் பல ஆண்டாக மதுக் கடையானது இயங்கிவருகிறது. இதனை எதிர்த்துப் பல அமைப்புகள்பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும்இன்று வரை டாஸ்மார் கடையினை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.இன்னிலையானது மாறுமா பள்ளி கல்லூரி அருகில் உள்ளமதுக் கடைகள் அனைத்தும் மூடி அடுத்த தலைமுறையின் வாழ்வினை எண்ணி, இனியாவது அந்த இடங்களில்நூலகங்கள் போன்ற மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் மாற்றுமா அரசு என்றால் கேள்விகள்மட்டுமே மிஞ்சும்.இத்தகையா நிலையில் குடிப்பதை நிறுத்தினால் நாங்கள்எங்கே போவோம் என வெள்ளை நிற வேட்டி சட்டையில் ஒரு குரல். மூடு மூடு டாஸ்மார்க்கை மூடுஎன துரத்தில் அழுத்தமாக ஒலித்துக் கொண்டு இருந்தது மற்றோரு குரல். இவற்றுக்கு இடையேபுதுசா நம்ம ஏரியாவுல டாஸ்மார் ஒப்பன் பண்ண போராங்களாம், நல்லது தாண்டா இவ்லோ துரம்வந்து தினமும் சரக்கடிக்கரது ரோம்ப கஸ்டமா இருகுடா, இந்த கடையில குவட்டர்கு எக்ஸ்ட்ராவ5 ரூபா வாங்கரானுங்க பாவிபசங்க என உலறியபடியேகடந்து சென்று கொண்டு இருந்தது ஒரு குரல்.இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தக் குப்பை போருக்கும் சிறுவர்களில்ஒருவன் என்னடா என்ன சொல்லறானுங்கனே ஒண்ணுமே புரியலையேடா. அப்போ டாஸ்மார்க் கடைய மூடிடுவாங்களாஅப்போ இனி காலிபாட்டில் கிடைக்காது இல்ல எனஏக்கத்துடன் கெட்டான் அந்தச் சிறுவன். இங்கு ஒலித்த அனைத்து ஒலிகளிலும் அழுத்தமாக ஒலித்ததுஇவர்களின் குரல். ஆனால் ஏனோ இந்த இளங் கீற்றுகளின் ஒலி அரசின் காதுகளுக்கு மட்டும்கேட்க மறுப்பதேன். ஆனால் இன்று வேண்டும் என்றாலும் அரசின் காதுகளுக்கு இவர்கள் பேசும்ஒலி கேட்காமல் போகலாம் ஆனால் என்றேனும் ஒரு நாள் இவர்களின் குரல் கேட்க மறுத்த அரசின்காதுகளை கிழித்து எரியும் என்பதில் ஐயமும் இல்லை... அத்தகைய நாள் வெகுதூரமும் இல்லை...
-உமா கார்க்கி