எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பழைய ஓய்வூதியத் திட்டம் ----முதியோர் மேலாண்மை அரசு அலுவலர்...

பழைய ஓய்வூதியத் திட்டம்  ----முதியோர் மேலாண்மை   

அரசு அலுவலர் ஒருவர், பணியில் சேர்ந்த காலத்திலிருந்து சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெறும்போது 58 வயதாக இருக்கும். உடலும் மனமும் தளர்ந்துவிடும் வயது. ஓய்வுக்குப் பிறகு வேறு எந்தப் பணிக்கும் செல்ல முடியாத நிலை வந்துவிடும். ஓய்வூதியப் பலனாகக் கிடைக்கும் தொகையும்கூட மகன் படிப்பு, மகள் திருமணம், வீட்டுக் கடன், இதர குடும்பச் செலவுகள் என்று கரைந்துவிடும். ஆக, மருத்துவச் செலவு உட்பட அடிப்படைத் தேவைகளுக்கே அவர் மாதாந்திர ஓய்வூதியத்தைத்தான் நம்பியிருக்க வேண்டும்.ஒரு அரசு, இலவசத் திட்டங்களுக்காகத் தன் மொத்த வருவாயில் 35% வரை செலவிடும்போது, அரசு அலுவலர்களுக்குக் கொடுக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தில் கை வைப்பது எந்த வகையில் நியாயம்? பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டுவருவதே சரியாக இருக்கும்!- க. இளங்கோவன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், நாகப்பட்டினம்.

நாள் : 20-Feb-16, 1:57 am

மேலே