எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரிதல் இல்லாமல் கிளப்பப்படும்பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி அதில்...

புரிதல் இல்லாமல் கிளப்பப்படும்பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி அதில் உள்ள வியாபார தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். 

முன்பு நம் தெருவுகளில் வண்டிகளில் உப்பு விற்பனை செய்து வருவார்கள் நாமும் படி கணக்கில் உப்பு வாங்கி சமையலுக்கு பயன் படுத்தி வந்தோம், அந்த நேரத்தில் வந்தது. விளம்பரம் உங்கள் உப்பில் அயோடின் இருக்கிறதா என.. 

நம் மனதில் அதை ஏற்றி சில்லறையில் வாங்கும் உப்பு குறைபாடு உள்ளது என நம்மை நம்பவைத்தனர். பின்பு குடிசை தொழிலாக இருந்து உப்பு வியாபாரம் அழிந்து போனது 
அதே போல ஒரு யுக்தி அரிசியில் வந்துள்ளது. 

அரிசியில் பிளாஸ்டிக். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சாதாரண அரிசியை விட பிளாஸ்டிக் அரிசி உற்பத்தி செய்ய அதிக செலவு பிடிக்கும். 

கலப்படம் கொண்ட அரிசி எப்படி என்றால் மைதா ஜவ்அரிசி மரவள்ளி கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் அரிசி. இது போன்று தயாரிக்கப்பட்ட அரிசியை கலப்படம் செய்து விற்பனை செய்யலாம். 

சரி பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றி பார்ப்போம். திடிரென மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி சில்லறை விற்பனையை அடியோடு முடக்க வேண்டும் என்பதே புரளி கிளம்புவோர்களின் திட்டம். 

அருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இனி அரிசி வாங்க நம் மனம் இடம் கொடுக்காது, ஓ.. இது பிளாஸ்டிக் அரிசியோ என்ற அச்சம் நம் மனதில் எழும் இதுவே பெரு முத்தலீட்டாளர்களின் எண்ணம். 

ஏன் சோறு பந்து போல் எகிறிவருகிறது.. 
அரைவேக்காட்டு சோறு குக்கர் சோறு அதிகமாக வேகவைக்கப்பட்ட சாப்பாடு இவற்றை எல்லாம் நன்கு பந்து போல் உருட்டி தரையில் அடித்தால் எகிறி வர தான் செய்யும். 

பேப்பரை நன்கு உருட்டி தரையில் அடித்தால் அது சிறிது எகிறி வரும் அதனால் காகிதத்தில் பிளாஸ்டிக் இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது.  ஏன் இட்லியை தரையில் அடித்தால் எகிறி வரும்  அதையும் பிளாஸ்டிக் இட்லி என சொல்லி விட முடியுமா..? 

நம் புரளிகள் சில்லறை வியாபாரிகளை அழித்து விட கூடாது.. நீங்கள் பரப்பும் செய்தியை கொஞ்சம் உணர்ந்து பரப்புங்கள்

பதிவு : ஜெகன் ரா தி
நாள் : 11-Jun-17, 1:38 pm

மேலே