எண்ணம்
(Eluthu Ennam)
வாளெடுத்து வெட்டிதலையை துண்டாக்கலாம்வார்த்ததோர் பெரும் தீயில்குதித்து சாம்பலாகலாம்ஓடும் வெள்ளத்தில்... (Barathi senthil)
02-Mar-2018 1:14 am
வாளெடுத்து வெட்டி
தலையை துண்டாக்கலாம்
வார்த்ததோர் பெரும் தீயில்
குதித்து சாம்பலாகலாம்
ஓடும் வெள்ளத்தில் தாவி
நீச்சல் அடிக்க மறந்து சாகலாம்
இது எல்லாம் செய்யாது
இங்கு நாம் உயிர் வாழ்ந்து தான்
தீர வேண்டுமென்றால்
கையேந்தி பசிக்காக
காசு கேட்கும் பச்சிளம்
அனாதை குழந்தைகளை
படிப்பிக்கச் செய்து
அவர்கள் உதடுகளில்
சிரிப்பிட்டு பார்த்து மகிழுவோம்..
எல்லா கடவுளும்
நமக்கு ஆயூளை பரிசளிபான்..
சமத்துவமாய் இரு - அந்தசல்லாப கடவுளுக்கும் ஓர்அழிவுண்டு பொறு!சாதி... (கவிதை தாசன்)
26-Apr-2017 8:19 am
சமத்துவமாய் இரு - அந்த
சல்லாப கடவுளுக்கும் ஓர்
அழிவுண்டு பொறு!
சாதி பயிரை அறுக்க
என் தோழா நீ
பகுத்தறிவு பெறு!!
சாதனைக் காலம் இன்று
நீ சாதனை செய்திட்டால்
இந்த
உலகில் உனக்கும்
புது வாழ்வு உண்டு