கவிதை தாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிதை தாசன் |
இடம் | : ௦௩kangeyam |
பிறந்த தேதி | : 03-Aug-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 725 |
புள்ளி | : 14 |
ஆயிரம் எண்ணங்கள்
மனதில்
அதில் எல்லோரா வண்ணங்கள்!
நட்பின் கூடலில்
நகைப்பின் வண்ணம்!
காதலின் ஊடலில்
கண்ணீர் சின்னம்!
பாதி கனவில்
பயத்தின் சாயம்!
பகல் விடிந்தால்
பாதி கனவும் மாயம்!
சுருதி இல்லா பாடலில்
சுகங்கள் ஆயிரம்!
குறைகள் அதில் கூறிட
கூட்டம் ஆயிரம்!
மழை மேகம் பாடிட
ஆடிடும் கூட்டம்
அதை இழந்தால்
பாடிடும் சோகம் !
கதிராடும் வயல்கள்
உயிர் பொறிக்கும்
கல்வெட்டுக்கள்!
கடமை செய்ய
ஆயிரம் கரங்கள்!
நம்பி உழைத்தால்
கையில் தவழும் வைரங்கள்!!
இதயத்தில்
உன் குரல் தேடினேன்
அது இல்லை
என்றதும் வாடினேன்
வாழ்வின்
இறுதியை தேடினேன்
இன்று
வானில் உன்னை கூடினேன்!!
மண்ணில் பிறந்து
மலையில் தவழ்ந்து
மழைநீர் சுரந்து
வானவில் கரை உடைத்த
வயங்கிழை நீ தான்!!
நொய்யலே நீ சிரித்தால்
நொடிந்திடும் எம்
மனம் மையலிலே
தையலே நீ நடந்தால்
தரைகள் கூட கரைகள் தான்!!
நொய்யல் கரை
தென்றல் தொட்டால்
தேகம் கூட சிறையில் தான்!!
நகைப்பது ஏன்? நொய்யலே
கண்ணகி சிலம்பை
களவாடி வந்தாயோ?
பார்வையிலே அச்சமென்ன?
பாண்டியன் படையெடுப்பா!
கல்லிலே அணை போடவா?
அணையிலே சிறைபடுமா
உன் அழகு!
வயலோரம் நீ வர
வளர்ந்திடும் உலகு!
பனையும் சுனையும்
பகிர்ந்திடும்
சுவையில் ஒன்று!
நதியும் கவியும்
எழிலாய் பாய்வது நன்று!
நதியும் தமிழும்
சேர்ந்திடும் நேரம்
தாகம் தீர்க்கும் மேகம்!
எங
நீ
நீதான்!
நீயே தான்!!
என் காலையும் மாலையும்
நிழலாய் தொடர்வதும்
நிலவாய் குளிர்வதும் நீ !!
ஒளியாய் உதிப்பதும்
உளியாய் சிதைப்பதும் நீ!!
மலராய் சிரிப்பதும்
மதுரமென என்
உயிரை ருசிப்பதும் நீ!!
ஊடலின் பின்வந்த
கூடலின் பாடல் நீ!!
பாடலினுள் வந்து
பரவசமூட்டும் காதலும் நீ!!
இதயத்துடிப்பிலும்
இசையும் கவிதையின்
அசையும் இலக்கியம் நீ!!
நீ யார்
நிலவா? மலரா?
நிழலா? ஒளியா?
பாடலா? காதலா?
பெருஞ்சண்டை
வானவில் வண்ணங்களல்ல
எனது வாழ்வு !
மழைநீரில் கரைந்திடும்
மாய ஓவியங்கள் !!
விண்ணைத் தொடும்
வீடும் கூட தெருவோரம் தான்!
ஆனால்
அந்த தெருவில் கூட நானும்
ஓர் ஓரம் தான்!!
தட்டிக் கேட்கிறேன்
கை எட்டிக் கேட்கிறேன்
கடவுளிடம் அல்ல
கருணை உள்ளத்திடம்!!
விளைத்து உண்பவர்க்கும்
விளைந்ததை உண்பவர்க்கும்
மத்தியில் நான் மட்டும்
குப்பையில்
வீழ்ந்ததை உண்கிறேன்!!
வறுமைக்கோடு என்று நான்அறிந்தது எல்லாம்
என் வயிற்று சுருக்கங்கள்!!
எல்லோரும் எனக்கு
மகாராஜாக்கள் !
என்னை பார்ப்பவர்கள் கூட
எஜமானர்கள் தான்!!
நான் பெறும்
சில்லறை காசுகள்
கூட எனக்கு
கட்டைவிரல்
சமத்துவமாய் இரு - அந்த