நீ
நீ
நீதான்!
நீயே தான்!!
என் காலையும் மாலையும்
நிழலாய் தொடர்வதும்
நிலவாய் குளிர்வதும் நீ !!
ஒளியாய் உதிப்பதும்
உளியாய் சிதைப்பதும் நீ!!
மலராய் சிரிப்பதும்
மதுரமென என்
உயிரை ருசிப்பதும் நீ!!
ஊடலின் பின்வந்த
கூடலின் பாடல் நீ!!
பாடலினுள் வந்து
பரவசமூட்டும் காதலும் நீ!!
இதயத்துடிப்பிலும்
இசையும் கவிதையின்
அசையும் இலக்கியம் நீ!!
நீ யார்
நிலவா? மலரா?
நிழலா? ஒளியா?
பாடலா? காதலா?