எண்ணம்
ஆயிரம் எண்ணங்கள்
மனதில்
அதில் எல்லோரா வண்ணங்கள்!
நட்பின் கூடலில்
நகைப்பின் வண்ணம்!
காதலின் ஊடலில்
கண்ணீர் சின்னம்!
பாதி கனவில்
பயத்தின் சாயம்!
பகல் விடிந்தால்
பாதி கனவும் மாயம்!
சுருதி இல்லா பாடலில்
சுகங்கள் ஆயிரம்!
குறைகள் அதில் கூறிட
கூட்டம் ஆயிரம்!
மழை மேகம் பாடிட
ஆடிடும் கூட்டம்
அதை இழந்தால்
பாடிடும் சோகம் !
கதிராடும் வயல்கள்
உயிர் பொறிக்கும்
கல்வெட்டுக்கள்!
கடமை செய்ய
ஆயிரம் கரங்கள்!
நம்பி உழைத்தால்
கையில் தவழும் வைரங்கள்!!