எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Geeths - எண்ணம் (public)
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா

    மேலும்

    நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
    போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
    மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
    மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

மக்கள் வெற்றி, பெண், ரண்டு பேரும் இங்க வாங்க.

😊😊😊😊😊😊😊
உரிமைக்குப் போராடும் மக்கள் வெற்றி பெறலாம். நீயும்    ஒரு   பெண்தான் நானும்   ஒரு  பெண்.
இப்ப எதுக்கு மக்கள் வெற்றி, பெண் ரண்டு பேரும் இங்க வாங்கன்னு கூப்பிட்ட?
😊😊😊😊
உங்க பேத்திங்க பேருங்களத்தான் தமிழ்ல கூப்பிட்டேன்   பாட்டிம்மா. 
😊😊😊😊😊😊
மூத்தவ பேரு நிக்கி. எளையவ பேரு லிக்கி. நீயேன் மக்கள் வெற்றி, பெண்-ன்னு கூப்பிட்ட?
😊😊😊😊😊
பாட்டிம்மா தமிழர்களில பெரும்பாலோர் பிறமொழிப் பேருங்களத்தான்  அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. வர்ஷா -ன்னு சில பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறாங்க. 'வர்ஷா'-ன்னா 'மழை'-ன்னு அர்த்தம். அந்த அர்த்தம் தெரிஞ்சாகூட    வர்ஷா-ங்கற  பொண்ணுங்களப்    பெத்த   பெற்றோர்களே அவுங்க பொண்ணுங்கள 'மழை' -ன்னு    யாராவது கூப்பிட்டா மழைன்னா கூப்பிட்டவங்ககிட்ட சண்டைக்குப் போயிடுவாங்க. அது கைகலப்பாக்கூட மாறிடும்.  இத என்னன்னு சொல்லறதுங்க பாட்டிம்மா?  அதச் சுட்டிக்காட்டத்தான் என்னோட பொண்ணுங்கள 'வெற்றி மகள்', 'பெண்' -ன்னு கூப்பிட்டேன். 
😊😊😊😊😊
ஆமாண்டி நம்ம தமிழ் மக்கள்ல முக்காவாசிப் பேரு திரைப்பட ரசிகர்ளா இருக்கறாங்க. என்ன செஞ்சு தொலைக்கிறது நாமும் பத்தோடு பதிணொண்ணா வாழவேண்டி இருக்குது. கெட்ட காலம்டி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Nikki=Victory of the people)
(Likki=woman) (Finnish origin)

மேலும்

மிக்க நன்றி அய்யா. 27-Oct-2017 6:55 pm
பன் மொழிப் புலவர் பார்வையில் பாட்டி --பேத்திகள் புதுமைப் பெயர் சூட்டும் வைபவம் சிந்திக்க வைக்கின்றதே ! போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:56 pm

மேலே