எண்ணம்
(Eluthu Ennam)
நாடு தழுவிய வேலை நிறுத்தம்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்
நாடு முழுவதும் 15 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம். வங்கி, போக்குவரத்து போன்ற பல அத்தியாவசிய சேவைகள் முடக்கம், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. தமிழகத்தில் குறிப்பிடும் அளவுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும் நாம் எதற்காக இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்று பார்ப்போம்.
தொழிலாளர் விரோத கொள்கை
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்த்தும் மேலும் சம்பளத்தை உயர்த்தக் கூறியும் ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். மேலும் ரயில்வே, பாதுகாப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற பொதுத் துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்தும் ஊழியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பொதுப் பயன்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள்
மத்திய அரசு அனைத்து அமைச்சர்களையும் பொதுப் பயன்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பொதுத் துறை வங்கிகளில் ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு பண பற்றாக்குறை இல்லாதவாறு உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான போனஸ் அளிப்பதாகவும், ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை அறிவித்தும் ஊழியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.
பாரதிய மசூதூர் சங்கம்
பெரிய ஊழியர் சங்கமான பாரதிய மசூதூர் சங்கம் எப்போதும் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடாது. இவர்கள் மட்டும் அரசின் முடிவை ஆதரித்தும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.350 உயர்த்தியதை வரவேற்றும் இரண்டு ஆண்டுக்கான போனஸ் வழங்குவதை மகிழ்ச்சியுடன் ஆதரித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பணிக்கொடை உயர்த்த வேண்டும்
ஓய்வு பெறும் போது அளிக்கப்படும் பணிக்கொடை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் பிஎப் நிதி கட்டணம் மற்றும் போனஸ் வழங்குவதை மேலும் பரிசீலனை செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டனர்.