எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



செட்டிநா‌ட்டி‌ல்  பிற‌ந்த  குட்டி ராணியே..


பிரம்மன் அவன் படைத்த அழகுமேனியே..


உன்னிடம் தான் இருக்கு பல ரகசியம்..

பார்ப்போர்தனை சொக்கவைக்கும்  நீ ஒரு பருவபெண்ணினம்..


நெற்றிதனில் தவழும் உன் அழகு கூந்தலும்..

அ‌ந்த கூந்தல்தனில்  சூடும் பூவுக்கு மணமும் கூடிடும்..


நெற்றினிலே வைத்திருக்கும் திருநீறு குங்குமம்..

நீ மங்கையல்ல தேவதையென மனதும் உணர்த்திடும்..


காது மடலில் தொங்கும் ஜிமிக்கி கம்மலும்.

நீ மேல் காது குத்தி கொண்டால் வசிகரம் கூடிடும்..


இமைகள் ரெண்டும் இரு துருவ வானவில்லடி..

கருவண்ண மை  இடுகையிலே கார்மேகம் திரண்டிடும்..


கெண்டை மீன்கள் துள்ளி ஓடும்

உந்தன் கண்களும்..

கண்கள் ரெண்டால் பார்க்கையிலே

பாயும் மின்சாரம்..


முக்கோண மூக்கழகி பெண் நீயடி..

மூக்கினிலே  அணிந்திருக்கும் மூக்குத்தியும் நட்சத்திரமாய் ஜொலித்திடும்..


உதட்டில் சாயம் பூசி செய்வாய் மூடு மந்திரம்..

செவ்விதழ்கள்  திறந்து பேசுகையில் தேனும் வழிந்திடும்..


உன் புன்சிரிப்பும் வெளிப்படுத்தும் புரிதல் ஆயிரம்..

அந்த சிரிப்பினிலே தடுமாறியவன் நானும் ஒருவனும்..


நீ பேசும் போது கீச்சு குரல் வார்த்தை வெளிப்படும்..

அ‌ந்த வார்த்தைதனில் கவிக்குயில்கள் கற்கும் சங்கீதம்..


உந்தன் சங்கு கழுத்து செந்நிறத்தில் சிவந்து ஜொலிக்கையில்..

எ‌ந்த தங்க நகையும் உன் நிறத்தின்முன் மங்கி போகுமே..


உன்  முன்னழகில் புதைந்திருக்கு  மர்மம் ஆயிரம்..

அங்க அசைவு, வளைவுகள் கண்டு மயங்கி விழுகணும்..


உன் கைகளிலே இருப்பது காந்த விசையடி..

கை உரசும் உன் வளையல்கள் வெளிப்படுத்தும் பல சங்கீதம்.


உன் இடுப்பழகில் தினம் தினம் சொக்கி போகனும்..

சேலை கட்டி இடையை ஆட்டி நடக்கும் போது போதை ஆகிடும்..


உன் பின்னழகு தானே இங்கு பெரிய பொக்கிஷம்..

பலர் பார்வையிலே அது உனக்கு கவர்ச்சி கூட்டிடும்..


உன் பளிங்கு தொடை கால்களுமே  பர்மா தேக்கு தான்..

உன் ஒய்யார நடையினிலே பூகம்பம் வந்திடும்..


நீ கால்களிலே அணிந்திருக்கும் முத்தில்லா கொலுசும் அழகுதான்..

உன் பாதம்தனை தொட்டதினால் விமோட்சம் அடைந்திடும்..


உன் பாதவிரல் பத்தும் பல வகையடி..

அது பூமிதனில் படும்போது இந்த மண்ணும் குளிர்ந்திடும்..





மேலும்

                    இனிய மங்கையர் தின நல்வாழ்த்துக்கள் -    அருணாமாதேஸ்வரி சித்ததார்த்தன் “மங்கையராய் பிறப்பதற்க்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மம்மா!” 

ஆணுக்கு பெண் சமமில்லையே! 
 என்று என்னும் சில மூடர்களும் இங்கு உண்டு  
பெண்மையே என்ன இல்லை உன்னிடத்தில் 
 உன் வலிமையோ வானை தொடும்! 
 உன் மென்மையோ பூக்களை மிஞ்சும்! 
 உன் திறமைக்கோ அளவில்லை! 
 நீயில்லா இவ்வுலகில் யவர் வாழக்கூடும் 
 நிகரில்லை உனக்கு யவரும் இவ்வுலகில் 
 சாதிக்க பிறந்தவளும் நீதான்! 
 சாதனையாளனை உருவாக்க பிறந்தவளும் நீதான்! 
   மழலையாய் உன் வரவு உன் தந்தைக்கு ஆனந்தமே! 
 சகோதரியாய் உன் பிறப்பு உன் உடன்பிறப்புக்கு தன்னம்பிக்கையே!
 தோழியாய் உன்னுடனான நட்பு ஒரு நல்ல வழிகாட்டியே! 
 மனைவியாய் உன் பொறுப்பு ஒரு தலைமுறையின் திறவுகோல்…  
 தாய்மைக்கான உன் போராட்டம் உன்னவனை ஆண்மகனாய் நிரூபிக்க! 
 போராடுவதற்கே பிறப்பு எடுத்தவள் பெண்…
 போராடியே அனைத்தையும் வெல்கிறாள் பெண்…   
“மங்கையராய் பிறப்பதற்க்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மம்மா! “ 



இப்படிக்கு 
மாதேஷ் சித்த்ரத் 

மேலும்


மேலே