எண்ணம்
(Eluthu Ennam)
எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!அந்த மகிழ்ச்சியான செய்தி... (கீத்ஸ்)
26-Sep-2017 2:31 pm
எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,
பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!
அந்த மகிழ்ச்சியான செய்தி :
எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.
போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.
காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.
இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.
மகிழ்ச்சிதானே!
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
மகிழ்வே..
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் 08-Aug-2020 1:29 pm
மகிழ்வான செய்தி ஆனாலும் கசப்பாக இருக்கிறது. என்னடா இப்படி சொல்றான் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீங்க. போட்டிக்கு நூறு இல்லை ஆயிரம் படைப்புக்கள் வரும் என்பது உறுதியான வெளிப்பாடு ஆனாலும் அந்த ஆயிரத்தில் ஒன்றுக்காவது பத்து தோழர்களின் வெகுமதியாக கருத்துக்கள் கிடைக்குமா என்பதில் விடையும் கேள்விக்குறி தான். நீண்ட காலங்களின் பின் எழுத்து தளத்தால் இப்போட்டி நடாத்தப்பட இருப்பது இன்பமான அறிவிப்பு. ஆனாலும் அதை விடவும் நீண்டகாலமாக நிலவும் நான் சொன்ன பற்றாக்குறை நீங்கி ஓர் ஆரோக்கியமான போட்டியாக இது அமையுமா என்பதில் மீண்டும் அதே கேள்விக்குறி தான்.இங்கு அற்புதமான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
ஒவ்வொரு எழுத்துக்களும் போட்டி போட வேண்டும் ஆனால் பொறாமை கொள்ளக்கூடாது. சிந்தனை நீர்விழ்ச்சியில்
கருத்து அருவிகள் சமுத்திரம் போல் பெறுக வேண்டும். வெகுமதிகள் யாவருக்கும் இல்லையென்றாலும்
மனத்திருப்தி ஒவ்வொரு படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லோரும் கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாவருக்கும் வாழ்த்துக்கள் தவறாக நான் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் என்னை மீறி ஏதும் தவறாக பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும்.
26-Sep-2017 5:59 pm
எழுத்து தோழர்களுக்கு ஓர் நற்செய்தி,
மே தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய போட்டியின் முடிவுகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது.
போட்டியின் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதால், தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகையுடன் 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்