எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிங்கப்பெண்ணே...

சிங்கப்பெண்ணே...  நீ
சினம் கொண்டால்
சீரும் பாம்புகள் கூட
சிதறிச் செல்லுமே...

கங்கை...
காவிரியே...
உன்னை
திருடித் திண்ணும்
கூட்டம் ஒருநாள்
வெகுண்டோடிடுமே..
நீ கரைபுறண்டோடிட வா...

பெண்ணிணமே
பெண்ணிணமே...
உன்னை வெறும்
பணிவிடை செய்யும்
இயந்திரம் என
எண்ணும் சில
எதிர் பாலிணம்
தன்னை நீயும்
சலவை 
செய்துவிட வா..

பதுமையே...
உன் வெறும்
விழிகளின்
முறைப்புகள்
போதும் இங்கே
சில கயவர்கள்
நெஞ்சம் அது
வெந்துவிடவே...

அன்பு காட்ட
மட்டுமல்ல
அனைத்திலும்
உன்னை
மிகைத்தவள்
பெண்ணென்று
காட்டிவிட
வீறுகொண்டு வா....

போதும்போதும்
இனியும் நீயும்
அடுப்படியும்
ஆணிண் மடியும்
மட்டும்தான்
வாழ்க்கை என்றால்
வேண்டாம் என்று
தூற்றி விடு...

தேவதைகள்
நீங்கள்...
வெண்மை மட்டும்
போதாதென்று
வேறு நிறத்திலும்
வாருங்கள்...
பொறுமை மட்டுமே
உங்கள் அடையாளம்
அல்ல... அதனையும்
மாற்றி விடுங்கள்...

படைத்திடுங்கள்
புதிய தூய்மை
இந்தியா....
துடைப்பங்களை
தூக்கி எரிந்து
தூக்குக்கயிறுகளை
பற்றிக்கொள்ளுங்கள்...
ஆம் பெண்மையாய்
பிறந்ததால் சில
அஃறினைகள் கூட
காமுகர்களின்
கால்களுக்கிடையில்
சிக்கிக்கொண்டு
சிண்ணாபிண்ணம்
ஆகின்றன....










மேலும்


மேலே