எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


          இதய இருட்டில்

என் மனசுல உன்னைய உருக்கி
நான் கரையுறன் மெழுகா 
என் நெனப்புல உன்னைய செதுக்கி
நான் வரையுறன் ஓவியமா ...

என் பொம்மி உசுருகுள்ள
நான் மனச ஒலவவிட்டேன் ...

என் காட்டுச் சிறுக்கிகிட்ட
நான் கட்டுக்கடங்கி கிட்டேன் ...

இமைய இறுக்கி விரிச்சாயே
உசுர இறுக்கி புடிச்சுக்கிட்டேன்  ...

இதய இருட்டில் சிரிச்சாயே
நிலவா நெனச்சி முடிச்சுக்கிட்டேன் ...


மேலும்


மேலே