காதலிசம்

கடவுளiல் தொடங்கி
கடவுளையும் தாண்டுவது
ஆன்மீகம்

வர்க்கப் போராட்டத்தில் தொடங்கி
வாழும் பூமியை
சொர்க்கபுரியாக்குவதில்
முடிவது மார்க்சியம்

அறியாமையில் தொடங்கி
அறிவில் முடிவது
பெரியாரிசம்

உணர்வில் தொடங்கி
உயிரையும் தாண்டிச்
செல்வது
காதலிசம் .


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:57 pm)
பார்வை : 24


மேலே