அம்மா உன் பிள்ளை நான்

அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியானதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழிநீரில் அழியும் ஓர் நேரம்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்


கவிஞர் : கவிஞர் வாலி(21-Apr-12, 10:01 am)
பார்வை : 51


பிரபல கவிஞர்கள்

மேலே