உன் குரல்

அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
"எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்"
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:11 pm)
பார்வை : 122


மேலே