பருவம் எனது பாடல்

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்

இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம்
குளிர் திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம்
அதில் மயக்கம் கூட வரலாம்

சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பழகும் விதம் புரியும்
அன்பின் பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும்
புது வாழ்க்கை அங்கு மலரும்


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:29 pm)
பார்வை : 105


மேலே