ஆமை முயல் கதை கேளுங்களேன்...!

நீயா நானா போட்டி எதுக்கு ?
நெஞ்சில் நிறைய அன்பு இருக்கு..!!

முயலுக்கு மூளையில் புத்தியிருக்கு
முன்னேற நண்பனோடு சக்தி இருக்கு

முதுகுலே ஆமையை தூக்கி சுமந்தே
முதல்பரிசு ஒன்றாக வாங்கிக் களித்தே...

நட்புக்கு இலக்கணமாய் நாங்களிருப்போம்..
நல்ல மனிதா இனி பாடத்தை மாற்று....

தூங்கிக் கழிக்கவே நேரம் இல்லடா
தூய நெஞ்சமே எங்கள் சொத்தடா....

மனித நேயத்தை பழகிப் பாத்துக்கோ
மறந்தால் எங்கள் படத்தை பார்த்துக்கோ....!

( அட என்ன பாக்குறே....?

மேலே உள்ள படத்த பார்த்துக்கோப்பா......! )

எழுதியவர் : HARI HARA NARAYANAN (6-Jan-13, 10:17 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 212

மேலே