உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி )

அண்டங்கள் படையெடுத்தன பூமிமீது
ஏனிந்த போர்க்கோலமென்றால் பழி நம்மீது!!

புல்தாவரம் தொடங்கி மனிதஉரு வரை
பூமித்தாயின் தொப்பூள் கொடி உறவு
சுகமாய் வாழ ஏர்பிடித்து உலவு
சுகதுக்கம் மறைந்து வரும் மனநிறைவு!!

சுற்றும் பூமியின் தென்றல் காற்று
சற்று இளைப்பாற மரங்களோடு ஊற்று
உழுதவன் படைப்பை உண்டு பசியாற்று
உலகம் நிலைக்க நீயும்நடு நாற்று!!

தேவைக்கு உணவும் பணமும் தரும் தோட்டம்
உழத்தெரிந்தால் போதும் இல்லை நட்டம்
நாங்கள் சொல்லிக்கொடுத்தோம் வேதம்
நீங்கள் பேராசைப்பட்டதனால் வந்தது பேதம்!!

நீர் இருக்கும் நிலத்தை நிர்மூலமாக்கி
பசை இல்லா பாலையை பணமாக்கி
பிறந்ததும் குடித்த சேனைப்பால் மறந்து
இறப்பீர்கள் எள்ளுதண்ணி கூட துறந்து!!

கவனமென்று சொல்லுமுன்னே புரிந்த மனிதன்
கவனத்தை உழவுமீது வைத்து விட்டான்
உழவின்றி உயிரில்லையென பயம் வந்ததினால்
எங்கள் கிரகத்திலும் தொடங்கியது ஆய்வு!

"வாய் ருசிக்கு தண்ணீர் உண்டா?
வாய்க்கால் வரப்பு வெட்ட வழியுண்டா?"

எழுதியவர் : க. கார்த்தீசன் (6-Jan-13, 10:08 pm)
பார்வை : 152

மேலே