திசை தெரியாமல் தெறித்து ஓடினர்.
இணைய தளத்தில்
இணைந்தன உள்ளங்கள்
போலியாய்ப் பேசி
போலியாய்ச் சிரித்து
இடையிலே அழைத்த
அலைபேசியில் அழுது
தடையாய் வந்தது
“தடிப்பயல்” என்று
சத்தியம் செய்து
பொய்யினை உரைத்து
நேரில் பார்த்திட
நாளொன்று குறித்தனர்.
ஆளே இல்லாத
அந்த இடத்தில்
பையன் அவனும்
பக்கத்து வீட்டுப்
பருவக் கிழவியும்.
போலி அடையாளம்
கொடுத்த இருவரும்
திருதிரு என்றே
விழித்துப் பார்த்து
திசை தெரியாமல்
தெறித்து ஓடினர்.