நீண்டு கொண்டே இருக்கின்றன....
என் நேரம் கடத்திப் போனாயடி....
நொடிமுள் அறியாமலே...
ஏன் பாரம் சுமத்திப் போனாயடி.....
யாரும் அறியாமலே.....
உன்னால்...
இரவுகள் வெறுக்கிறேன்....
நிலவுகள் வெறிக்கிறேன்.....
தூங்காத கண் கொண்டு.....
உன் நினைவு எரிக்கிறேன்......
மிச்சமான உன் நினைவை
கவிதைகளாய் வடிக்கிறேன்....
நீண்டு கொண்டே இருக்கின்றன.....
என் இரவுகளும் கவிதைகளும்........

