களமில்லாப்போர்
காற்றில்லா நேரத்தில்
நெல் தூற்ற வந்து விட்டேன் !
களமில்லா தேசத்தில்
கருவியின்றி
யுத்தம் செய்தேன்!
கொள்ளில்லாக் குவளைதன்னை
கண்டெடுத்து சேர்த்து வைத்தேன் .
கல்மனதும் வலிப்பதென்ன..?
கார் முகிலும் கலைவதென்ன..?
தூண்டா மணி
விளக்கொளியில்
தூரிகையை ஏந்திவிட்டேன் !,
மெய் எழுத வந்த கை ,
பொய் எழுதிப் போய்விடுமா?....