உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதைப் போட்டி)

உலகம் என்பது -
உயிர்களால் ஆனது

உயிர்களின் உயிர்ப்பொருள் -
உணவில் உள்ளது

உணவு என்பது -
உழவால் விளைவது

ஆக-
உலகின் அர்த்தம்
உழவில் உள்ளது

போர்த்தொழிலை - பொறியியலை
மருத்துவத்தை - விஞ்ஞானத்தை
வணிகத்தை - அரசுப்பணியை
பெருபாலானோர் உயர்த்திப்பேசுவர்
உழவினை இழித்துப் பழித்துப் பேசுவர்

அன்பர்களே. . .
அப்பணிகள் நடைபெறாமல் போனால்
நாட்டின் முன்னேற்றம் தடைபடும்
ஆனால்-
உழவுத் தொழில் புறக்கணிக்கப்பட்டால்
உயிர்கள் யாவும் உடைப்படும்

உணருங்கள் தோழர்களே!
உழவின்றி
உழலாது உலகு

எழுதியவர் : புதுவைப் பிரபா (8-Jan-13, 6:18 am)
பார்வை : 168

மேலே