உழவனுக்கு தை திரு நாள் என்ன கருப்பு தினமா?.. (பொங்கல் கவிதைப்போட்டி கவிதை )

" யர்ர் அங்கே ..! தை திங்களை எதிர்பார்த்து
பொங்கல் திருநாளை
போற்றுவது ...!
வறுமைப்போர் இங்கே..! நித்தம் வயலுக்கு காவிரி
நீரை எதிர்ப்பார்த்து,எங்கள்
வாலைத்தாரின் கானல் நீரும் வற்றியது ....

இன்று எங்கள் வயிற்று பிழைப்புக்கே
திண்டாட்டம், ஆனால் நாளைய
வால்மார்ட் தீர்ப்புக்கு சில காரியவாதிகள் இன்றே
உடுப்பி ஓட்டலில் கொண்டாட்டமா ?..
மடயன்களா நீங்களும் மானிடமே .. சுயநலமாய்
இலாபம் பார்க்க ஆசைப்பட்டு ,
உன் உடல் நலத்தில் நஷ்டம் காணாதே ..!
விவசாயிகளின் வயிற்றில்
அடித்து பிடுங்கிய பணத்தை மருத்துவ
ரசாயனத்திற்கு செலவிடாதே ...!

இன்னும் வெளுக்கவில்லை அரசியல்
சாயம் , கொஞ்சம்
கொஞ்சமாய் அழிந்துவருகிறது
தமிழனின் விவசாயம்..! இன்று
கணினி முன்னால் அசையாத கண்களால்
நித்தம் பத்து விரலுக்கு வேலை
தந்து, இயந்திர மானிடனாய் இயங்கும்
இன்றைய மக்களுக்கு எங்கே தெரியபோகிறது ஒரு உழவனின் வாழ்க்கை ?..

உழவனின் சிறு குறிப்பு கேள், இறைவனின்
உன்னத படைப்பு இவனென
உறுதிமொழி எடுத்துக்கொள் ..

அட ,தினந்தினம் சாமத்து சேவல் இவன்
முகத்தில் விழிக்கும், வான்
மேகத்து கதிரவன் இவன் வியர்வையில்
குளிக்கும் ..கோமாதா
கன்றும் கூட இவன் உழைப்பை கண்டு
வியக்கும் .. காடு தான்
வீடு ..! மண் தான் இவனுக்கு சோறு..!
மா கன்று, தென்னங்கன்று தான் இவனுடைய
வளர்ப்பு பிள்ளை .. உயிர் நாடி
போகும் வரை உழைப்பே இவன் எல்லை ..!
பனி காலத்தில் அதிகாலையில்
பணி செய்பவன் எவன் ?.. மார்கழி, தை
பனியுலும் பணிக்கொண்டு
மாதுளை கனி காண்பான் இவன் ..!


உழவன் ஏமாற்றம் பட்டுப்பட்டு வெறுமையில்
சில பொழுது கழித்து, இன்று
வறுமையில் வாழ்வை தொலைத்து
நிர்பானியாய் நிற்க்கிறான் ..! இதோ
குமறுகிறான், கொந்தளிக்கிறான் ..!

ஏமாற்றம் ,

"வானிலை மாற்றம் தந்தது ஏமாற்றம்
மழை காலத்தில் வெயில்
எங்கள் வயிற்றில் அடிக்கிறது..!

காவிரி நீர் வரும் எங்கள் வாழ்வு
மலரும் என்ற
எதிர்ப்பார்ப்பும், ஊற்று நீர் கூட
கிடைக்காமல்
சாக்கடையில் கலந்து விட்டது ..!


மின்சார பற்றாக்குறை வந்த நாள்
முதல், நித்தம் தவளை
கூட எட்டிப்பார்க்க பயப்டுகிறது
ஆழ்துளை கிணற்ற்றுக்குள்..!


உர விலை ஏற்றம் , உயிர் விட்ட
செடி கொடிகள் ..! கேள்வி
கேட்டால் விலைவாசி ஏற்றம் என்று
சொல்லி , வேலி போட்டு
விடுகின்றனர் எங்கள் வாழ்வுக்கும் ..!


இது கூட பொருத்து கொள்வோம்..!
ஆனால், எங்களை வேறு
தொழில் நாடி செல்க.. என்ற
வார்த்தை வெகுண்டு வந்ததோ
உயர் பதவிக்கொண்ட
ஒரு தலைவனிடமிறந்து..! அது
செவிச்சேர்ந்த சில நிமிடமே.., உயிர் நாடி
உறங்கி போனது சில கணமே ..!



இவை யாவும் இயற்கையால் வந்த
விதியல்ல ?. இவற்றின்
ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல
மானிடனின் பண சம்பாதிக்கும்
ஆசை மட்டுமே.. இதற்க்கு
பெயர் சுயநல சதியல்லவா ?..


இந்நிலைமை தொடர்ந்தால்....
அடுத்த தை திரு நாளுக்கு
பீசாவும், பெப்சியும் தான்
சர்க்கரை பொங்கலாகும்...
நித்தம் பச்சரிசியும், கருங்கரும்பும்
அரிதாகும் ...!

எழுதியவர் : dhamu (8-Jan-13, 4:53 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 178

மேலே