தை மகளே வருக! வருக! (பொங்கல் கவிதை போட்டி)

தங்க தை மகளே வருக! வருக! தங்க தை மகளே வருக! வருக!
என்றும் தங்கி,எங்களுக்கு நல்வாழ்வுதனை தருக
பழைய காலம் முதல் தொடர்கின்றன பழமொழி
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நம்பிக்கை வார்த்தையுடன்
தொடங்குகிறது உன்னை வரவேற்கும் இன்றைய தினம்
ஆயிரம் சோகங்கள் மனதிலும் வாழ்விலும் இருந்தாலும்
எப்பொழுதும் வரவேற்க தவறியது இல்லை உன்னை
அதி காலையின் ஓய்வற்ற சூரிய கதிர்கள் படர
மின்னும் அழகிய வானவில் போல் வண்ண வண்ண கோலம்
கொஞ்சம் மஞ்சள் கொத்தோடும் அதன் மீது படர்ந்து
கொஞ்சும் சிறு இலைகள் காற்றில் ஆட அதன்
நறுமணம் அந்தி சாயும் வரை அங்கும் இங்கும் ஆடி கொண்டும்
எறும்பு அரிக்கப்பட்ட மாமரத்து இலையோடும்
எங்கள் மனம் போல் இறுகிப்போன கரும்போடும்
அதன் அருகே தாத்தா விட்டு போன உழைபைபும்
துருப்பு ஏறி களைத்து போன கலப்பையும்
மஹா என்ற பெயரிட்ட மாடும் சேர்ந்து கொள்ள
புதியதாக வாங்கிய பானையில் அதி வேக நெருப்பிட்டு
பதுங்கி பதுங்கி பாயும் பளிச்சிடும் வெள்ளை நூரை
கூடி நின்று குழந்தையுடன் அதை பார்த்து
பொங்கலோ பொங்கலோ என்ற குலவை சத்தம்
எங்கள் கண்ணீரின் பயணத்தில் வருடத்தின் முதல் நாள் பூ
இசையுடன் சந்தோசமும் சிரிப்பும் ஆரம்பிக்க
ஆனந்தம் கொள்ள செய்கிறது நீ வந்து போகும் நாள் வருக தை மகளே வருக

எழுதியவர் : த.நந்தகோபால் (8-Jan-13, 6:29 pm)
பார்வை : 337

மேலே