உறவும் பிரிவும்

உறவும் பிரிவும் நெருக்கத்தின் இலக்கணம்
இவை ஒரே கோட்டின் இரு முனைப்புள்ளிகள்
நெருக்கம் என்பது இடைவெளியின் அளவு
இடைவெளி என்பது புரிதலின் ஆழம்
புரிதலின் ஆழம் என்பது பண்பின் வெளிப்பாடு

பண்பு என்பது சுயத்தின் வரையறை
பெருந்தன்மை என்பது சுயத்தின் எல்லைக்கோடு
எல்லைக்கோட்டின் சுருக்கம் உறவின் நெருக்கம்
எல்லைக்கோட்டின் விரித்தல் பிரிவின் தொடக்கம்

சுயம் விரியும்போது உறவில் இடைவெளி
சுயம் சுருங்கும்போது
இடைவெளியில் குறுக்கம் உறவில் நெருக்கம்

சுயத்தின் விரித்தல் தொடரும்போது
உறவில் விரிசல், பிரிவில் நிரந்தரம்

சுயத்தின் சுயபுரிதல் நடுநிலை ஆளுமை

சுயத்தை பிறர் புரிதல்-
உணர்வுகளின் பரிமாற்றம்,
அன்பு, பாசம், காதல், மற்றும்
இவற்றின் வளர்ச்சிப் பரிணாமம்

சுயத்தை பிறரின் ஆழப்புரிதல்-
மனதில் நெருக்கம், உணர்வுகளில் உருக்கம்
கோபம், வெறுப்பு, இவற்றில் உரிமை
தயக்கம், தடுமாற்றம் இவற்றிற்கு விடை கொடல்

நெருக்கம் என்பது உறவு
இடைவெளி என்பது பிரிவு
உறவு என்பது மகிழ்வு
பிரிவு என்பது துயரம்

எழுதியவர் : மங்காத்தா (4-Jan-13, 8:34 pm)
பார்வை : 206

மேலே