சில தத்துவங்கள்

ஆணவத்தைத் துடைப்பது அன்பு

காதலைத் துடைப்பது கடுமை
கடுமையைத் துடைப்பது மென்மை

கண்ணீரைத் துடைப்பது கருணை
சோகத்தைத் துடைப்பது இரக்கம்
பாவத்தைத் துடைப்பது அருள்
காயத்தைத் துடைப்பது மருந்து
வடுவைத் துடைப்பது ஆறுதல்
நட்டத்தைத் துடைப்பது ஈடு

வாட்டத்தைத் துடைப்பது வளமை

ஒருமையைத் துடைப்பது பன்மை
மடமையைத் துடைப்பது அறிவு

பயத்தைத் துடைப்பது நம்பிக்கை
நம்பிக்கையைத் துடைப்பது கயமை
அவநம்பிக்கையைத் துடைப்பது உறுதி
அவதியை துடைப்பது எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பைத் துடைப்பது தன்நிறைவு
அவசரத்தைத் துடைப்பது அவகாசம்

வேகத்தை துடைப்பது இடைவெளி
ஏமாற்றத்தைத் துடைப்பது துணைசார்பு (alternative)

வாழ்வை துடைப்பது மரணம்
ஆக்கத்தைத் துடைப்பது அழிவு
அழிவைத் துடைப்பது காலம்

காலத்தைத் துடைப்பது “மடமை” !!

எழுதியவர் : மங்காத்தா (4-Jan-13, 8:27 pm)
பார்வை : 266

மேலே