தமிழே வெல்லும்
கற்பதனை தெளிவாகக் கற்றுக்கொள்ளுங்கள்,
தமிழரே கற்றவற்றில் வழுவாது பற்றிநில்லுங்கள்!
குற்றங்களும் கொடுமைகளும் நிறைந்துவிட்டதே,
ஏனோ மனிதம் மட்டும் காணாமல் மறைந்துவிட்டதே!!
ஆசைகளும் சபலங்களும் மலிந்துவிட்டதே,
அன்பென்னும் அற்புதமோ ஒழிந்துவிட்டதே!
பாதுகாக்கும் ஓசோனிலே ஓட்டைவிரியுதே,
நாம் கொட்டுகின்ற குப்பைகளோ குன்றாய்வளருதே!!
மூன்றெழுத்து முதல்மொழியே செந்தமிழே,
நீ ஈன்றெடுத்த தமிழினமே வெல்லும் உலகையே!
தொல்லைகளே சூழ்ந்துகிடக்கு திந்த பாரையே,
அவற்றை இல்லைகளாய் ஆக்கிடுமே எங்கள்பார்வையே!!
முத்தான முத்தமிழால் மூழ்கடித்த தெள்ளமுதே,
பித்தனையும் புத்தனாக்கும் திருக்குறளைத் தந்தவளே!
உளமாற உறுதியேற்போம் இது சத்தியமே,
இனி உலகமே உள்ளங்கைய்யில் நிச்சயமே!!
தமிழர்களே தமிழர்களே தலைநிமிர்ந்து நில்லும்,
தேன் தமிழ்கூறும் அறநெறியில் நீங்கிடாதுசெல்லும்!
தமிழன்றி வெறெந்த மொழியிதனைச் சொல்லும்,
என்றென்றும் நமதருமைத் தாய்த் ”தமிழேவெல்லும்!!!”