எழுத்து தள நிர்வாகிகளுக்கு...

தோழமை நெஞ்சத்து எழுத்து தள நிர்வாகிகளுக்கு..,

வணக்கமும் வாழ்த்துகளும்..

கடந்த ஆண்டை விட தளத்தின் செயல்பாடுகளில் பல மெச்சத் தக்க மாறுபாடுகள் உண்டாகியுள்ளதை வரவேற்கும் நிலையில் சில முக்கிய வேண்டுகோள்கள்...

1. கண்டிப்பாக உறுப்பினர் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும்..
2. கருத்து தெரிவிக்கும் உறுப்பினர் மட்டுமே புள்ளிகள் வழங்க வேண்டும்...
3. கருத்து இன்றி எந்த புள்ளிகள் வழங்கினாலும் அவை நிராகரிக்கப் பட வேண்டும்
4.உறுப்பினர் சுய தகவல்கள் உண்மையானதாக உள்ளனவா என எவரும் காண வசதிகள் செய்ய வேண்டும்

இவை நான் சொல்ல காரணம் பல திறன் மிக்க இளம் படைப்பாளிகள் இங்கு வந்துள்ளனர்..
நாற்றுகளுக்குள் போட்டியும் உரிய தரப் புள்ளியும் அவர்களுக்கு கிட்ட வேண்டுமே..

ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்
அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (9-Jan-13, 9:13 am)
பார்வை : 180

மேலே