காற்றே உனது பெயர் சுறுசுறுப்பா?

சுறு சுறுப்பே நீ தான் காற்றோ?
ஓரிடத்தில் நிற்க மாட்டாயா?
நின்றால் நான் தென்றலைத் தொட முடியுமா?
நித்தமும் நான் வாழவும் முடியாதா?
சோம்பித் திரியும் சோம்பேறிகளுக்கு நீ
கற்றுத் தருவதென்ன சுறு சுறுப்புப் பாடமா?
எங்கும் நிறைந்து எதிலும் நிறைந்து
நிற்கும் காற்றே!

உனது சுறுசுறுப்பு நிதானமானால் தென்றல்!
சுறுசுறுப்பு மீறி நிதானம் இழந்தால் புயல்!
தென்றலும் புயலுமாக மாறி மாறி வீசும்
காற்றே உனது பள்ளியில் முழு நேர
வேலை நேரமா?
உனக்கு விடுமுறை விட்டால்
உயிர்களும் மூச்சை விட்டு விடுமே!

உலகைக் காக்க உருவெடுத்த காற்றே!
சுறுசுறுப்பு வகுப்பு எடுக்கும் கனியே!
தென்றலென மனதில் குடியிருக்கும் கன்னியே!
புயலாகி எம்மை அழிக்காதே!
புவியின் முகத்தை கிழிக்காதே!
காற்றே உனது பெயர் சுறுசுறுப்பா?

எழுதியவர் : மேரி ஜெசிந்தா (9-Jan-13, 1:35 pm)
பார்வை : 87

மேலே