நீ கண்ணகி

பொறுமை உள்ளம் கொண்ட
மென்மை உடல் படத்த பெண்மையே!
உணக்கா இந்த நிலமை!!

தாயாக மதிக்கப்படும் உன்னை
தலைகீழாக மாற்றி உனது வாழ்க்கையை கேள்வி குறியாக்கியது இக்காலம்!!

தவறுகள் ஆணிடமா, இல்லை உன்னிடம்தான் - உள்ளத்தில் தூய்மையாக இருந்து கொண்டு ஏன் ஆடைகளை குறைக்கிறாய் நடன அழகி போல்!!

இன்று பெண்கள் அளிவதேல்லாம் காட்டிலும், மலைகளிலும் இல்லை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பேருந்துகளில்தான் - உனது வாழ்க்கை ஏன் இப்படி தடம் மாறியது!!

காதலில் கூட காம கொடூரன் உருவாகலாம் - இனி அதையும் நீ உறுதியான முடிவுகளை எடுத்து செயல்படு!!


உன்னை வணங்குவதே கற்ப்பு என்னும் தாய்மை இருப்பதால்தான் அதையும் நீ பரி கொடுத்தால் எதற்க்காக வாழ வேண்டும்!!

உன்னை அனுமதியோடு தொட்டால் அவன் உன் கணவன் - அனுமதி இன்றி தொட்டால் உன் கண்களாலையே அவனை கொன்றுவிட வேண்டும்!!

கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்துவிட்டு எதர்க்கு
கண்களில் பயம்- உன்னால் முடியும் கயவனை எதிர்த்து போராட கற்றுக்கொள்!!

உனக்குள் உறங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி விடு பெண்ணே - அது உன் மானத்திற்க்கு மாய வழியாய் அமையும், உன்னை பாதுகாக்கும்!!

இனி நீ கண்ணகியாகவே இரு - அப்போதுதான் ஆண்டவனே உன்னை கற்பழிக்க வந்தாலும் அழிந்து விடுவான் இந்த பூலோகத்தில் அழுவதற்கு யாரும் இல்லாமல் அனாதை பிணமாக!!

எழுதியவர் : வே.அழகேசன் (9-Jan-13, 1:40 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : nee kannagi
பார்வை : 152

மேலே