அன்று ........ இன்று .......

திருக்குறள் இரண்டடி,
திரைப்படங்களில் நாகரிக பெண்களின்
துணிமனியும் இரண்டடி ...

சாணி தெளித்து அரிசி
மாக்கோலம்.,
சாய்காலம் ஆனாலும்
வாசல் தெளிக்காத அலங்கோலம்...

தெருக் குழாயில் குடிநீருக்கு சண்டையடி,
டெலிவிசனில் சீரியலுக்கு,
மருமகள்- மாமியார் சண்டையடி...

உழுது, விதைத்து, அறுவடை,
நெல் சாகுபடி.,
உயிர் தொழில்நுட்பத்தில்,
ஜீனை மாற்றியமைத்து உயிர் கொலையடி....

உயிருக்கு உயிராய் உடன்பிறப்பு பாசம்,
உயிலுக்கு உயிலாய் உடன்பிறப்பு வேஷம்....

மாநகரில் கடிதம் அனுப்ப ஒரே இடம்.,
அஞ்சல் நிலையம்,
மாநகரில் கடிதம் அனுப்ப பல இடம்.,
இணையதள நிலையம்...

ஊருக்கு ஊர் ஒன்று இரண்டு கோவில்கள்.,
ஊருக்கு ஊர் ஒன்று இரண்டு உயிரை கொல்லும் மது பார்கள்...

கண்ணதாசன் கிறுக்கல்களும் கவிதைகள்.,
என்னுடைய கவிதையோ கிறுக்கல்கள்-இன்று.

எழுதியவர் : நிலன்பாலா (9-Jan-13, 11:18 pm)
சேர்த்தது : nilanbala
பார்வை : 104

மேலே