விழி வேண்டும்- நான் மாற்றுத்திறனாளி.
துடித்த தாய்மையின் வலியுணர்ந்து
..... ததும்பி நின்ற கண்ணீரோடு
கருவிழி இரண்டும் கரைந்து விட்டது.
.....நான் பிறக்கும் முன்னே...
புரிந்து கொண்ட தாய்மை
.....புன்னகையை மட்டும் மறைத்துவிட்டது
கண்ணீரில் கதை எழுதினாலும்
.....கவனிக்க மறந்தது இல்லை.....
வாழ்நாளில் காணும் கனவுகள்
.....கருமை இன்றி வேறெதுவும் இல்லை
தாய்மைதனின் உருவம் வரைய
.....வண்ணம் ஏதும் விளங்கவில்லை.....
ஆறுதல் கூற வழி தேடி
.....அழகாய் இருக்கிறாய் என கூற
அழகின் உருவம் தெரியாமல் நான் கேட்க
.....அங்கிருந்து எழுந்து விட்டது தாய்மை.
.....கண்ணீரில் கதை எழுத.....
பாசத்தில் விலகி போன விழிகள்
.....நேசத்திற்காக வரவேற்கப்படுகின்றன
புன்னகையை மட்டுமல்ல
.....புன்னகை அரசியாய் வாழ வைக்க.....
இருளிடம் கடன் கேட்டு உள்ளேன்
.....கருநிறம் கொஞ்சம் வேண்டுமென்று
உங்களிடமும் கேட்கிறேன்
.....விழி தாருங்கள்; வழி தாருங்கள்
மாற்று திறனாளிக்கு மாற்றம் தாருங்கள்
.....திறனாளியாக மாற......
(தானம் செய்யுங்கள் விழிகளை, உங்களால் முடியுமெனில்)...............