உழவின்றி உலகில்லை. (பொங்கல் கவிதை போட்டி)
மன்னைக் கிழித்தே மென்விதை விதைத்தே
தண்ணீர் பாய்ச்சி தளிர் பயிர் வளர்த்தே
உண்ணும் உணவு தரும்
உழவுக்கும், உழவனுக்கும் முதல் வணக்கம்.
வேலும், வாளுமென
வேட்டையாடித் திரிந்த மனிதன்
வாழும் பண்பறிந்து
உயர்ந்ததுவே உழவினால் தானே.
காட்டை சீர்திருத்தி
கழினியாக மாற்றாவிடில்
கோட்டை கொத்தளமும்
கொள்ளை பணமும் இங்கேது?
வயல்விரிந்த பரப்பு இன்று
வானுயர்ந்த கட்டிடமானதே
அதில் விலை என்ன கொடுத்தாலும்
தலையுமா முளை நாற்று?
விசச்சாயம் நீரில் கலந்து
விவசாயம் கொல்லாதே
விளைகின்ற கேடுகளில்
உன் தலைமுறையை தள்ளாதே.
மரபணுவில் மாற்றம் என
பல விதைகள் விதைக்கின்றாய்
மலடாய் நிலம் போனால் மனிதா
மனிதா நீ என்ன செய்வாய்?