மரங்கள்...பல விதம்....

புத்தர் காலத்தைய மரம் ஒன்று...
ஆசையைத் துறக்கக்
கற்றுத் தந்தது.

நியூட்டன் காலத்தைய ...
ஆப்பிள் மரமோ...
ஈர்ப்பு விசையை விடுவித்தது.

எங்கள்...
பள்ளிக்கூடத்து மரங்களோ...
நிழல் பரப்பி...குழந்தைகளுக்கு...
வகுப்பெடுத்துக் கொண்டிருந்தது.

என்றாலும்...
நேற்று வயலோரமாய் இருந்த..
வேப்பமரம் ஒன்று...
திடீரெனப் பால் வடியச் செய்து..

காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது...
வெகு தீவிரமாக,

எழுதியவர் : rameshalam (10-Jan-13, 12:31 am)
பார்வை : 102

மேலே