உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே.... (பொங்கல் போட்டி கவிதை )

உழவின்றி உலகில்லை
உணவின்றி உயிரில்லை
உழவனின்றி உற்பத்தி இல்லை
உயிரோடு வாழ அவனுக்கிங்கே உரிமையில்லை

உணவை கருவாக்க, உருவாக்க வயல்காட்டில்
உடல் வருத்தி, வருந்தி, உதிரம் சிந்தி
உழைப்பவன் உல்லாசத்தை ஒருபோதும்
உணர்ந்ததில்லை...

உற்பத்தி ஆலைகளும்,உர ஆலைகளும்
கக்கும் புகையும்,கழியும் கழிவுப்பொருளும்
களங்கமில்லா, காற்றிலும்- நிலைக்காத
நீரிலும் நிரந்தரமாய் கலப்பதால்,

மாதம் மும்மாரி பொழியும் மழையும்
பொய்யாகி போனதொரு காரணத்தாலே
பொய்த்துப்போன விளைச்சலாலே
விளை நிலமெல்லாம், விவசாயின் கண்ணீரை துடைத்திட துணிவு ஒன்று இல்லாமலே
துவண்டு துயரத்தில் கிடக்கிறது.....

உயர்படிப்பு படித்து, உயர பறந்து, உத்தியோகம் பார்ப்பதே உன்னதமென்றும், உயர்வென்றும்
உள்ளத்தில் நினைக்கும் உழவன் மகனின் மனம், உழைப்பின் கடினத்தையும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கப்பெறாமையும் போவதாலே உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே.......

-PRIYA

எழுதியவர் : PRIYA (10-Jan-13, 1:18 am)
பார்வை : 115

மேலே